தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சிவகாசி மாநகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
விருதுநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி மாநகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் கே.வி.கந்தசாமி, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் அதிவீரன்பட்டி செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, மாதத்துக்கு ஒரு முறை தெருமுனை கூட்டம் நடத்தி தி.மு.க.வின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற இப்போதே தேர்தல் பணியை தொடங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் அமைக்கப்பட உள்ள ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். விதிமீறல் காரணம் காட்டி மூடி கிடக்கும் பட்டாசு ஆலைகளை திறக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மாநகர பகுதி நிர்வாகிகள் சபையர் ஞானசேகரன், காளிராஜன், ஆ.செல்வம், மாரீஸ்வரன், பொன்சக்திவேல், பலராமன், சீனிவாசபெருமாள், ராஜேஷ் மற்றும் தி.மு.க. மாநகரட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.