பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவது குறித்து ஆலோசனை

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவது குறித்து ஆலோசனை

Update: 2023-05-22 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே ஆதனூர் ஊராட்சியில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், தலைமை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரவீந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரேணுகா குமரகுரு, நீலவண்ணன், அங்கன்வாடி அமைப்பாளர் கஸ்தூரி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், கிராம நிர்வாக அலுவலர், அனைத்து பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து ஆதனூர் ஊராட்சி பகுதியில் வசிக்கும் பள்ளி செல்லா குழந்தைகள் 2 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுடைய பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் 2 குழந்தைகளையும் அடுத்த மாதம் (ஜூன்) முதல் பள்ளியில் சேர்த்து படிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற சிறார்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்