அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கடலூர்:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. அரசால் போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து கடலூர் அண்ணாபாலம் சிக்னல் அருகில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் சேவல்குமார், மீனவரணி தங்கமணி, ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, முன்னாள் நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் மாதவன் வரவேற்றார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் கந்தன், வக்கீல் பாலகிருஷ்ணன், வெங்கட், வினோத், வர்த்தக அணி வரதராஜன், மாமன்ற உறுப்பினர் தஷ்ணா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன், மருத்துவ அணி கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.