விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் திருவரங்குளம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். அவை தலைவர் ஜோ, பொருளாளர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழகப் பேச்சாளர் முருகேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டணம் உயர்வால் சாதாரண பொதுமக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மின்கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். கூடுதல் வரிவிதிப்புகளை ரத்து செய்ய வேண்டும். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள், கிராமமக்கள் அதிகம் பயணிக்கும் டவுன் பஸ்களை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்க வேண்டும். கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி மருத்துவ பரிசோதனைகளுக்கு பணியாளர்கள் நியமித்து முழுநேரமும் மருத்துவர்கள் பணியிலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தமங்கலத்தை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.