அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி
கந்திலி கிழக்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
கந்திலி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபங்களில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஜி.ரமேஷ், சி.எம்.மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஆர்.ஆறுமுகம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்துகொண்டு, புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசினார். இதில் நகர செயலாளர் டி.டி.குமார், மாவட்ட துணை செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், இணை செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.டி.முருகன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூபதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணி, ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர் கலந்துகொண்டனர். முடிவில் வக்கீல் சாந்த குணசீலன் நன்றி கூறினார்.