அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மணல்மேட்டில் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத்தலைவர் பொன்னையன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் செல்லையன், செல்வி, மணல்மேடு நகர அவைத்தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் மதனசிவராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, சக்தி, ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மணல்மேடு நகர செயலாளர் தொல்காப்பியன் நன்றி கூறினார்.