எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும்

Update: 2023-10-15 16:48 GMT

எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும்

அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி முருங்கப்பாளையம் பகுதியில் 26-வது வார்டு பூத் கமிட்டி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தாங்கி பேசியதாவது:-

நிர்வாகிகள் அனைவரும் பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சரான பிறகு அனைவரும் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு உத்தரவாதம் அளிப்பார்.

தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏறிவிட்டது. ஏழை, எளிய மக்கள் வீட்டு வாடகை, மின்சார கட்டணம் உயர்வு போன்றவற்றால் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அமைக்க பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் முன்னிலை வகித்தார். தெற்கு மத்திய பகுதி செயலாளர் கவுன்சிலர் கண்ணப்பன், அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்