பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைப்பு...!
பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது.;
சென்னை,
சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்க உள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வானகரம் நோக்கி பயணித்து வருகிறார்.
இதற்கிடையில், ஓ.பன்ன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி பயணித்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் நிலவி வருகிறது.
இந்த மோதலின் போது, பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது. கதவை அடித்து உடைத்த ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகம் உள்ளே நுழைந்தனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஈபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டன.