அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

Update: 2022-09-21 18:45 GMT

வானூர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் நடைபெற்றது. இதற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், பக்தவச்சலம், கண்ணன், ராமதாஸ், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தொள்ளமூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமார், மாவட்ட பிரதிநிதி கிளியனூர் பிரபு, தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர்கள் எழில், ராஜ், கோகுல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்