அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இலவச வேட்டி-சட்டை

திருக்குறுங்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இலவச வேட்டி-சட்டை வழங்கப்பட்டது.

Update: 2023-01-11 19:18 GMT

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் திருக்குறுங்குடி பேரூராட்சி கட்சி அலுவலகத்தில் கட்சி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வேட்டி- சட்டை வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார். நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி நகர செயலாளர் முருகன், துணை செயலாளர் ஜோயல், களக்காடு ஒன்றிய துணை செயலாளர் படலையார்குளம் தாஸ், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆலோச்சனா ஸ்டாலின் உள்பட கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்