அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 5 இடங்களில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்தானது

தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.;

Update:2024-03-20 17:37 IST

சென்னை,

மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தே.மு.தி.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது. தொகுதி ஓதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள்:-

திருவள்ளூர் (தனி)

மத்திய சென்னை

கடலூர்

விருதுநகர்

தஞ்சாவூர்

Tags:    

மேலும் செய்திகள்