அ.தி.மு.க. ஆட்சியில் தான் டெங்கு உயிரிழப்புகள் அதிகம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-04 14:09 GMT

கோவை,

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது ,

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1,021 மருத்துவர்கள், 946 மருந்தாளுநர்கள், 526 உதவியாளர்கள், 977 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே முதல்முறையாக கலந்தாய்வு நடத்தி அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளோம். .வடகிழக்கு பருவ மழை தொடங்கிய பிறகு அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு தேவைப்படும் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அமைத்து சிகிச்சை வழங்கப்படும். .

தமிழகத்தில் எங்கே டெங்கு இருக்கின்றது என அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும். டெங்கு உயிரிழப்பு அதிமுக ஆட்சியில்தான் அதிகம். அ.தி.மு.க. ஆட்சியில் 2012 இல் டெங்கு உயிரிழப்பு 66 பேர். 2017 ல் 65 பேர். தமிழக வரலாற்றில் அதிகப்படியான டெங்கு இழப்புகள் இதுதான். இந்த ஆண்டில் டெங்கு காரணமாக உயிரிழந்தது ஆறு பேர் தான். தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு எங்கேயுமே இல்லை, பதட்டத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்