அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 12 பேர் மீது வழக்கு
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடி மேற்கு தெருவை சேர்ந்தவர் செந்தூர் பாண்டி (வயது 34). இவர் சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:- சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது விருதுநகர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தர்மலிங்கம், நக்கலக்கோட்டை மணிகண்டன், கடம்பன்குளம் மகேஷ், சூலக்கரை கார்த்திக், பூபதி, நாகராஜ், பசும்பொன் நகர் சரத்குமார், குமார், வாழவந்தபுரம் மருது, சென்னல் குடி ராமமூர்த்தி உள்பட 12 பேர் ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் கத்தி, அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் வந்து தன்னை தாக்க முற்பட்டதாகவும் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் ஊர்க்காரர்கள் வந்துவிட்டதால் அவர்கள் 12 பேரும் எனக்கு கொலை மிரட்டல்விடுத்து விட்டு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சூலக்கரை போலீசார் விருதுநகர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தர்மலிங்கம் உள்பட 12 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.