அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

செங்கோட்டை நகரசபை கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-14 19:00 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகரசபை கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. நகரசபை தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் (பொறுப்பு) ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அ.தி.மு.க. கவுன்சிலா்கள் ஜெகன், சுடர்ஒளி ஆகியோர் பேசுகையில், 2022-2023-ம் ஆண்டிற்கான வருவாய் செலவின தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இதுவரையில் பதில் வரவில்லை.

மேலும் செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் ரூ.2½ ேகாடியில் கட்டி முடிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி வாரச்சந்தை கட்டிடம், மின்மயானம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை திறப்பது குறித்து தெளிவான தகவல் தெரிவிக்கவேண்டும். இதற்கு நகரசபை தலைவா் முறையான பதில் அளிக்க வேண்டும் என்றனர். ஆனால் நகரசபை தலைவர் பதில் கூறாமல் அரங்கை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் கூட்டம் நடக்காமல் பாதியிலே நின்றுவிட்டது. அவருடன் தி.மு.க. கவுன்சிலா்கள் எஸ்.எம்.ரகீம், இசக்கிதுரைபாண்டியன், பேபி ரெசவு பாத்திமா, இசக்கியம்மாள் சந்திரமேரி, பினாஷா சரவணகார்த்திகை, காங்கிரஸ் உறுப்பினர் முருகையா ஆகியோரும் சென்றுவிட்டனர்.

இதனால் விரக்தியான அ.தி.மு.க. கவுன்சிலா்கள் துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் முத்துப்பாண்டி, ஜெகன், சுப்பிரமணியன், சுடர்ஒளி, ராதா, இந்துமதி, சுகந்தி, சரஸ்வதி, பா.ஜ.க. கவுன்சிலர்கள் வேம்புராஜ், ராம்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி நகரசபை தலைவரின் அறை முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனா். இதனையடுத்து நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) ரவிச்சந்திரன், தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் 15 நாட்களில் பூங்கா மற்றும் சந்தைகடை உள்ளிட்ட கட்டிடங்கள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை தொடா்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.


Tags:    

மேலும் செய்திகள்