அ.தி.மு.க. கவுன்சிலர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

அ.தி.மு.க. கவுன்சிலர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-29 18:37 GMT

அறந்தாங்கி:

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு 7-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் குழந்தை செல்வன் (வயது 35). இவர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது வார்டுக்கு சாலை அமைக்க டெண்டர் வேண்டும் என அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமியை ஒருமையில் பேசியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் போலீசாரிடம் ஏற்கனவே புகார் ஒன்று கொடுத்து உள்ளார். புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் போலீசாரிடம் புகார் மனு ஒன்று கொடுத்து உள்ளார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான் பணியில் இருந்த போது குழந்தைசெல்வன் எனது அறைக்கு வந்து பணி செய்ய விடாமல் தடுத்து அறைக்கு முன் நின்று தகாத வார்த்தைகளால் பேசியதாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் குழந்தைசெல்வன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்