அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடைபெற்றது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளை தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.