அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
விருத்தாசலத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் அ.தி.மு.க. நகர செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் உள்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு செயலாளர்களுக்கு தீர்மான பதிவேடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகர அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், நகர துணை செயலாளர் அரங்க.மணிவண்ணன், பொருளாளர் முக்தார் அலி, மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், கோவை மண்டல தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வக்கீல் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உள்கட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு செயலாளர்களுக்கு தீர்மான பதிவேடுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற நாம் எவ்வாறு களப்பணியாற்றுவது என கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் வளர்மதி ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா வேங்கடவேணு, ஒன்றிய செயலாளர் முத்துபிள்ளை, இணை செயலாளர் மலர்கொடி உத்ராபதி, துணை செயலாளர் ஆண்டாள் கலிவரதன், மாவட்ட பிரதிநிதிகள் சுப்புபிள்ளை, சுரேஷ், வட்ட செயலாளர்கள் முரளிராஜா, செந்தில், ரஞ்சித் மற்றும் நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.