அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

வால்பாறை பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

Update: 2023-06-04 21:15 GMT

வால்பாறை

வால்பாறை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 85 பள்ளிகள் உள்ளன. இங்கு பல பள்ளிகளில் மிகவும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார கல்வி அலுவலர்கள் வெள்ளிங்கிரி, பன்னீர்செல்வம் தலைமையில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் சென்று அரசின் சலுகைகள், திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவ-மாணவிகளை பெற்றோருடன் பள்ளிக்கு அழைத்து வந்து சேர்த்து வருகின்றனர். வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலை பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை ஆசிரியர் பரமசிவம், ஆசிரிய பயிற்றுனர்கள் மாணவரை பெற்றோருடன் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர். தொடர்ந்து வால்பாறை பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளை சேர்க்கும் பணியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய ஆசிரியர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்