மாணவர் சேர்க்கை விவகாரம் : கல்லூரி கல்வி இயக்குனரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும்- ராமதாஸ்

மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பான கல்லூரி கல்வி இயக்குனரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும் என டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-07-03 15:52 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வுகள் மூலம் 64 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள 36 சதவீத இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ளன.

இத்தகைய சூழலில் கல்லூரிக் கல்வி இயக்குனர் பிறப்பித்திருக்கும் அரசாணை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். இதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். மே 22 நாளிட்ட உயர்கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் தி.மு.க. அரசு மயக்கம் கொள்ளாமல், தடுமாறாமல் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்