அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை

அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.;

Update:2023-05-28 00:23 IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் தரவரிசை பட்டியல் 25ம் தேதி மாலை இணையதளம் வழியாக வெளியானது இதனைத் தொடர்ந்து சிறப்பு ஒதுக்கீடு பிரிவு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவ படை வீரர்களின் குழந்தைகள், அந்தமான் நிக்கோபர், (தேசிய மாணவர் படை) மாணவர்களுக்கான கலந்தாய்வு 29.5.2023 அன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

முதல் கட்ட கலந்தாய்வு பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் ஆகிய கலையியல் பாடப்பிரிவுக்கான சேர்க்கை 1.6.2023 அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர்த் தொழில் நுட்பவியல், கணிணி அறிவியல் என அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான முதல் கட்ட சேர்க்கை 2.6.2023 அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

வணிக நிர்வாகவியல் மற்றும் வணிகவியல் துறைக்கான முதல் கட்ட சேர்க்கை 3.6.2023 அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் ஆகிய கலையியல் பாடப்பிரிவுகளுக்கு 12.6.2023 அன்று காலை 9 மணிக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர்த் தொழில் நுட்பவியல், கணிணி அறிவியல் என அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட சேர்க்கை 13.6.2023 அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. வணிக நிர்வாகவியல் மற்றும் வணிகவியல் துறைக்கான இரண்டம் கட்ட சேர்க்கை 14.6.2023 அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது என்பதை கல்லூரி முதல்வர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்