நாளை விண்ணில் பாயும் ஆதித்யா விண்கலம்: பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update:2023-09-01 14:18 IST

திருவள்ளூர்,

பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பற்றிய ஆய்வை, இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி நிறுவனங்களே மேற்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சூரியன் பற்றிய ஆய்வில், தற்போது 4-வது நாடாக இந்தியா இணையப் போகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்படும் 'ஆதித்யா எல்-1' விண்கலம்தான் இந்த புதிய சாதனையை நிகழ்த்தப்போகிறது. சுமார் 400 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. நாளை காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படவுள்ள நிலையில் தற்போது கவுண்டவுன் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், ராக்கெட் ஏவப்படும்போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம் திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்