உடன்கட்டைகாரி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா; பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
உடன்கட்டைகாரி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா; பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
காஞ்சிக்கோவில் தண்ணீர்பந்தல் பாளையத்தில் பிரசித்தி பெற்ற உடன்கட்டைகாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலையிலேயே பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பிறகு கோவிலில் விநாயகர், உடன்கட்டைகாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் உடன்கட்டைகாரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலத்தார்.
இதில் உலக மக்கள் நலன் வேண்டி விளக்கு பூஜையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.