மானியத்துடன் சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

மானியத்துடன் சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்,;

Update:2022-11-15 01:08 IST

மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்திட தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக நியமனம் பெற்று, சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியமும் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும், வயது 18 முதல் 65 வரையிலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் எவரும் தாட்கோ திட்டத்தில் மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது, சிமெண்டு விற்பனை கடையின் இடம் சொந்தமாகவும், குத்தகைக்காகவும், வாடகை கட்டிடமாகவும் இருக்கலாம். அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்களின் சாதிச்சான்று, வருமான சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று, ஆதார் அடையாள அட்டை, கல்விச்சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொண்டு ஆதிதிராவிடர் விண்ணப்பதாரர்கள் www.application.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்திலும், பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் www.fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களை பெற அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள அறை எண் 225-ல் உள்ள தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலகத்தை 04329-228315 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்