முத்துமாரியம்மனுக்கு சீர் கொடுத்த ஆதிநாயகப்பெருமாள்

முத்துமாரியம்மனுக்கு ஆதிநாயகப்பெருமாள் சீர் கொடுத்தார்.

Update: 2023-09-02 19:27 GMT

சமயபுரம்:

மண்ணச்சநல்லூரை அடுத்த கோபுரப்பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த ஆதிநாயகப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் முரளிபட்டர் தலைமையில் நேற்று காலை கோபுரப்பட்டி செல்வவிநாயகர் கோவிலில் இருந்து புதிய குதிரை வாகனம் கரிக்கோலை புறப்பாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆதிநாயகப்பெருமாள் பரிமேலழகராய் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க அங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றடைந்தார். அங்கு, தனது தங்கையான முத்துமாரியம்மனுக்கு பட்டுப்புடவை, தேங்காய், பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை ஆதிநாயகப்பெருமாள் வழங்கினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கோவிலுக்கு சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் கமிட்டி தலைவர் அனந்தராமன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்