திருச்சி வேளாங்கண்ணி இடையேகூடுதல் ரெயில் இயக்க வேண்டும்- ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

திருச்சி வேளாங்கண்ணி இடையேகூடுதல் ரெயில் இயக்க வேண்டும் என்று ஆலோசனைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Update: 2023-06-23 19:55 GMT

திருச்சி கோட்ட ரெயில் பயனீட்டாளர்கள் ஆலோசனை கமிட்டி கூட்டம் கோட்ட மேலாளர் மணீஷ்அகர்வால் தலைமையில் திருச்சியில் நடந்தது. கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உள்பட 15 கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டு திருச்சி கோட்டத்தில் உள்ள ரெயில் பயணிகளுக்கான கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில், கமிட்டி உறுப்பினர்கள் திருச்சி-வேளாங்கண்ணி கூடுதல் ரெயில் மற்றும் திருச்சி-பெங்களூர் இடையே பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும் பயணிகளுக்கான வசதிகள், ரெயில்நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், முதியவர்கள், மாற்றுதிறனாளிகளுக்காக அனைத்து ரெயில்நிலையங்களிலும் பேட்டரி கார் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், ரெயில் நிலைய வளர்ச்சிக்கான ஆலோசனைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்