சென்னை எழும்பூர் - மங்களூரு சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்- தெற்கு ரெயில்வே

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-06-03 15:22 GMT

சென்னை,

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து  நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம் மங்களூரு சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16159) இருகூர் மற்றும் போத்தனூர் வழியே இயக்கப்படும். மேலும் கோவை வடக்கு மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நிற்காது. பயணிகளின் வசதிக்காக கூடுதலாக நிறுத்தமாக போத்தனூரில் நிறுத்தப்படும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வைஷ்னோ தேவி கட்ராவில் இருந்து வருகிற 10-ந் தேதி வரை இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் இம்சாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16318) இருகூர் மற்றும் போத்தனூர் வழியே இயக்கப்படும். மேலும் கோவை நிறுத்தத்தில் நிற்காது. பயணிகளின் வசதிக்காக கூடுதலாக நிறுத்தமாக போத்தனூரில் நிறுத்தப்படும்.

கேரள மாநிலம் சோரனூரில் இருந்து வருகிற ஜூன் 7 மற்றும் 10-ந் தேதிகளில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் பயணிகள் ரெயில் போத்தனூர்-கோவை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, அதே தேதிகளில் கோவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சோரனூர் செல்லும் பயணிகள் ரெயிலும் போத்தனூர்-கோவை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்