காத்திருப்போர் அறையில் கூடுதல் இருக்கைகள்

கோத்தகிரி தாசில்தார் அலுவலக காத்திருப்போர் அறையில் கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-08-01 19:15 GMT

கோத்தகிரி

கோத்தகிரி தாசில்தார் கோமதியிடம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், இ-சேவை மையம், கோர்ட்டு ஆகிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வதால், இந்த வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்போர் அறை மற்றும் ஆண், பெண் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால், காத்திருப்போர் அறையில் வெறும் 6 இருக்கைகள் மட்டுமே உள்ளன. மேலும் அங்கு குடிநீர் வசதி இல்லை. இதே போல கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி செய்யப்படாததால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி காத்திருப்போர் அறையில் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்தி, அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் கழிப்பிடங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்துவதுடன், தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்