வெளிமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆவின் பால் கூடுதலாக வினியோகம்

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-17 17:53 GMT

கோப்புப்படம்

சென்னை,

'ஆவின்' மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையொட்டி இந்த மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆவின் நிறுவனம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க பால் போதுமான கையிருப்பு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்