விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு-தெற்கு ரெயில்வே தகவல்
குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.;
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் வருகிற 26-ந் தேதி முதல் புதிதாக எடை குறைந்த (எல்.எச்.பி.) ரெயில் பெட்டி இணைக்கப்படுகிறது. ஏற்கனவே 19 ரெயில் பெட்டிகள் இந்த ரெயிலில் உள்ளது. இந்த நிலையில் புதிதாக பொருட்களை கொண்டு செல்ல கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.