அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா
சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;
சுரண்டை:
தென்காசி தொகுதி சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக 11 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 33 லட்சம், சுந்தரபாண்டியபுரம் அரசு பள்ளியில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்ட ரூ.1 கோடியே 27 லட்சம் நபார்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாமை தங்கையா நாடார் தலைமை தாங்கினார். முன்னாள் நகர தி.மு.க. செயலாளர்கள் ஆறுமுகசாமி, பூல்பாண்டியன், நகர வர்த்தக அணி அமைப்பாளர் மா.முத்துக்குமார், 14-வது வார்டு தி.மு.க. செயலாளர் ஐ.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன் வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.பழனிநாடார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ், துணை தலைமை ஆசிரியர் கனகராஜ், கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், அமுதா சந்திரன், வேல்முத்து, உஷா பேபி, அன்னபிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.