மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-24 15:14 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் (பொதுப்பணித்துறை) தயானந்த் கட்டாரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வகம், நூலகம், விரிவுரையாளர்கள் அறையை ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகள் 70 சதவீதம் முடிந்து உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள பணிகளை அதிக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார். மேலும் ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரியை இணைக்கும் பாலம் பணிகளுக்கான அறிக்கையை தயார் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து காக்காதோப்பு பகுதியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதி அறை, குடும்ப நீதிமன்ற போன்றவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் அம்ரித், முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், தலைமை பொறியாளர் இளஞ்செழியன், கண்காணிப்பு பொறியாளர்கள் சங்கரலிங்கன் (மருத்துவம்), காசிலிங்கம் (நீதித்துறை), செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்