ஊர் பொது இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்ட நடவடிக்கை
ஊர் பொது இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில், வெம்பக்கோட்டை தாலுகா சாமிதேவன்பட்டி கிராமத்தில் ஊர் பொது இடத்தை தனியாருக்கு வழங்க வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அந்த இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கு கிராம மக்கள் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காத நிலையில் அந்த இடத்தில் அரசு அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.