பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகப்பட்டினம்:
பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
நாகை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று கையில் தனது உடைமைகள் அடங்கிய பையுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். தனியாக வசிக்கும் எனக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்.
மீன் வியாபாரம்
குடும்ப செலவிற்காக மீன் வியாபாரம் செய்து வருகிறேன். வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்கு நீண்ட நேரம் ஆகும். அந்த நேரத்தில் தனது குழந்தைகள் தனியாக இருப்பதால் பாதுகாப்பு குறித்து அச்சமாக உள்ளது. எனக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த மாதம் நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ெகாடுத்தேன். அதற்காக என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
பாதுகாப்பு வழங்க வேண்டும்
இது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. எனவே பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.