'லியோ' படம் திரையிடுவதில் விதிமீறல் ஏற்பட்டால் நடவடிக்கை

‘லியோ’ படம் திரையிடுவதில் விதிமீறல் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-16 19:02 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த 'லியோ' தமிழ் திரைப்படத்திற்கான சிறப்பு காட்சி 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படுகிறது.

தொடக்க காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி 5-வது இறுதி காட்சி அதிகாலை 1.30 மணிக்குள் முடிவடையும் வகையில் திரையிட வேண்டும். அதிகாலை 1.30 மணி முதல் காலை 9 மணி வரை எத்தகைய காட்சியும் திரையிடக் கூடாது.

அனுமதிக்கப்பட்ட நுழைவு கட்டணம் மற்றும் வாகன நிறுத்த கட்டடணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். திரையரங்குகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு, போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் திரைப்படத்தை காட்சிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்