இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை

சீர்காழி நகராட்சியில் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர் மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-10-15 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி நகராட்சியில் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர் மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன.. இக்கடைகள் மற்றும் மீன் விற்பனை செய்யும் இடங்களில் கழிவுகள் பொதுவெளிகளில் கொட்டப்படுவதாக நகராட்சிக்கு தொடர்ந்து புகார் வந்ததது.இதையடுத்து இறைச்சி, மீன் விற்பனையாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் ராம் செந்தில்குமார், மேலாளர் காதுர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ் வரவேற்றார்.

இறைச்சி கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை

கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் பேசுகையில், கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது குப்பை தொட்டிகளிலோ கொட்ட கூடாது. நகராட்சியின் சார்பாக தனியார் ஒப்பந்த நிறுவனம் இறைச்சிக் கழிவுகளை சேகரித்து அனல்மின் நிலையங்களுக்கு அனுப்ப உள்ளனர்.எனவே தனியார் ஒப்பந்த பணியாளர்கள் வரும்பொழுது அவர்களிடம் இறைச்சி கழிவுகளை பாதுகாப்பான முறையில் ஒப்படைக்க வேண்டும். இதை மீறி பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூட்டத்தில் மீன், ஆடு, கோழி, இறைச்சி கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்