எடையளவு முத்திரையிடாத வணிகர்கள் மீது நடவடிக்கை-தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

எடையளவு முத்திரையிடாத வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

Update: 2022-12-22 22:23 GMT

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

நெல்லை தொழிலாளர் துணை ஆய்வாளர் 3-ம் சரகம் தலைமையில், சங்கரன்கோவில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் 1-ம் சரகம், 2-ம் சரகம், முத்திரை ஆய்வாளர் அடங்கிய குழுவினர் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சிக்கடை, மீன் கடை, தினசரி மார்க்கெட், சாலையோர கடைகளில் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டனர். இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த சி வகை விட்டம் 11, மேஜை தராசு 2, வில் தராசு 1, இரும்பு எடை 36, மின்னணு தராசு 26 என மொத்தம் 76 தராசுகள் பறிமுதல் செய்து வணிகர்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வணிகர்கள் தங்களது எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கைகளை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்