50 வணிகர்கள் மீது நடவடிக்கை

மாவட்டத்தில் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் 50 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறினார்.

Update: 2023-05-23 20:29 GMT


மாவட்டத்தில் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் 50 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறினார்.

சிறப்பு ஆய்வு

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது எடை அளவுகள் உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வணிக உபயோகத்தில் வைத்திருந்த 7 வணிகர்கள் மீதும் எடை அளவுகள் மறு முத்திரையிடப்பட்டதற்கான சான்றிதழ் பார்க்கும் எண்ணம் வெளிக்காட்டி வைக்காத 42 வணிகர்கள் மீதும் சராசரி எடையினை சரிபார்க்க வணிகர்கள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 1 வணிகர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிறைத்தண்டனை

எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டிக்கு ரூ.25ஆயிரம் அபராதமும், 2-வது மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பாக புகாரினை 04562-225130 என்ற டெலிபோன் மூலமாக தெரிவிக்கலாம். தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர்துறை அலுவலக கட்டிடம், கலெக்டர் அலுவகம் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.

குறைந்த பட்ச ஊதியம்

அதேபோல திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் நிறுவனங்கள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் குறைந்த பட்ச கூலி சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 10 நிறுவனங்கள் மீது முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அந்த நிறுவனங்களின் மீது கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏப்ரல் மாதம் குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 7 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு குறைவு சம்பளம் ரூ.4,71,879 மதுரை தொழிலாளர் இணை ஆணையரால் பெற்று வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு ஆய்வில் சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர்கள் தயாநிதி, உமா மகேஸ்வரன், செல்வராஜ், சந்திரன், துர்கா, பிச்சைக்கனி மற்றும் சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்