தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை

தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2022-09-18 19:54 GMT

நெல்லை குறுவட்ட அளவிலான தடகள போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 6 தங்க பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதேபோன்று வள்ளியூரில் நடந்த மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தனர். மாணவர்களை பயிற்சியாளர்கள் ராஜாமணி, சங்கரபாண்டியன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்