மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2023-04-30 04:02 GMT

சென்னை,

சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் நேற்று வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்த நாளானவரும் ஜூன் 3-ம் தேதி, பேனா நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல்நாட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டலமும் விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் குறித்து கோவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.மெய்யநாதன் கூறுகையில்,

"கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும். வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை. வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.மூங்கில், அரசமரம், ஆலமரம், பூவரசமரம் உள்ளிட்ட ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் நாட்டு மரங்களைத்தான் நட வேண்டும்." என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்