ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சோழந்தூர் ஊராட்சி மேட்டு சோழந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி(வயது 60). இவர் நேற்று சோழந்தூர் பஸ் நிறுத்தத்தில் டீ குடித்துவிட்டு தனது சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராமநாதபுரத்தில் இருந்து திருவாடானை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக முனியாண்டி மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.