அந்தியூரில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்

அந்தியூரில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்;

Update:2023-05-07 04:55 IST

அந்தியூர்

மும்பையில் இருந்து நூல் (பேல்) பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோபி பகுதிக்கு அந்தியூர்-அத்தாணி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார். தவுட்டுப்பாளையம் பாலம் அருகே சென்றபோது அங்கு வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதி நின்றது. இதில் லாரியின் முன்பக்க பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.

மேலும் காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி இருந்ததால் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. தடுப்புச்சுவரில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டாததால் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு தடுப்புச்சுவர் இருப்பது தெரிவதில்லை. மேலும் தடுப்புச் சுவரில் விளம்பர நோட்டீசுகள் அதிக அளவில் ஒட்டப்பட்டு் இருப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்