கார் மோதி விவசாயி பலி

Update: 2023-04-20 19:00 GMT

காரிமங்கலம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவீரஅள்ளி அருகே மொள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 59). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி வந்தார். ஆஞ்சநேயர் கோவில் எதிரே சென்றபோது சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்