தேவகோட்டை
ராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று முருகேசன் காரைக்குடியில் இருந்து திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புளியால் சந்திப்பில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.