ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது-பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஏற்காடு:
சுற்றுலா
சேலம் அழகாபுரம் பகுதியில் ஸ்வீட் கார்ன் ஏற்றுமதி செய்துவருபவர் சரவணன். இவருடைய மனைவி சங்கீதா மற்றும் 20 பெண்கள் ஏற்காட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் சுப்பிரமணிக்கு சொந்தமான வேனில் ஏற்காட்டிற்கு புறப்பட்டனர். வேனை, அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார்.
ஏற்காடு முழுவதும் சுற்றி பார்த்து விட்டு மலைப்பாதை வழியாக சேலம் செல்வதற்கு 60 அடி பாலம் அருகே சென்ற போது திடீரென வேனில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், அங்குள்ள பாறை மீது மோதி வேனை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வேன் கவிழ்ந்தது
அப்படி இருந்தும் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பரெிய அளவில் காயம் ஏற்படவில்லை. லேசான காயம் அடைந்தவர்கள் அந்த வழியாக வந்த வாகனங்களில் ஏறி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.