ஓசூரில் கல் விழுந்து கட்டிட மேஸ்திரி சாவு

ஓசூரில் கல் விழுந்து கட்டிட மேஸ்திரி இறந்தார்.

Update: 2022-09-18 18:45 GMT

ஓசூரில் கல் விழுந்து கட்டிட மேஸ்திரி இறந்தார்.

கட்டிட மேஸ்திரி

ஓசூர் கும்பாரபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவர் ஓசூர் அலசநத்தம் பகுதியில் அத்திப்பள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்து வரும் கட்டுமான பணியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின் கட்டிடத்தில் வெங்கடேசன் தூங்கி கொண்டிருந்தார்.

அவர் தூங்கிய இடத்தின் அருகில் சிமெண்டு மூட்டைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு அதன் மீது தார்ப்பாய் விரிக்கப்பட்டு இருந்தது. மேலும் அதன் மீது ஆலோ பிளாக் கல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தூங்கி கொண்டிருந்த வெங்கடேசன் மீது ஆலோ பிளாக் கல் விழுந்தது. இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விசாரணை

இந்த நிலையில் நேற்று காலை கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அப்போது வெங்கடேசன் தலை மீது ஆலோ பிளாக் கல் விழுந்து அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்தனர். வெங்கடேசனின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என போலீசாரிடம் கூறினர். இதுகுறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்