ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

Update: 2022-09-14 22:41 GMT

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்திலிருந்து பழனியாபுரி செல்லும் வழியில் உள்ள தமிழரசன் நகரை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சதீஷ் (வயது 26). இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த எக்மோர் பயணிகள் ரெயில் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்