சேலம் அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்-விவசாயி படுகாயம்

சேலம் அருகே 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், விவசாயி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-07-06 21:41 GMT

கருப்பூர்:

சேலம் கருப்பூர் அருகே மாங்குப்பை பழையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுந்தரம் (வயது 54) என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிக்கொண்டு டால்மியா போர்டு பகுதியில் சென்றார். அப்போது டிராக்டர் பாலசுந்தரம் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வே பாலம் பணிகள் நடந்த இடத்தில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த பாலசுந்தரத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர துணை கமிஷனர் மாடசாமி, சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், கருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்