மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.

Update: 2022-05-28 00:00 GMT

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்திரசேகரன் (வயது 40) என்பவர் பலியானார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் சிவா (21) என்பவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிவா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்