பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு
மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மோகனூர்
மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சைல்டு இந்தியா பவுண்டேஷன், யுனிசெப் மற்றும் நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தின வார விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை சுடரொலி வரவேற்றார். நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் சதீஷ்பாபு தலைமை தாங்கி பேசினார். இதையடுத்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குழு உறுப்பினர்கள் சாந்தி, பாக்கியலட்சுமி ஆகியோர் பேசினர். பின்னர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் சைல்டு லைன் பணியாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் பணியாளர்கள் மற்றும் பொத்தனூர் வேர்ட் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.