காரைக்குடி
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலின் பேரில் பொறுப்பு முதல்வர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த உறுதிமொழியில் சாதி, மதம், இனம் வேறுபாடு இன்றி இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடுவேன் என்றும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் அரசியலமைப்பு சட்ட வழிகளை பின்பற்றி சட்ட ரீதியாக தீர்த்துக் கொள்வேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான இளம் குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் ஜெயசாலா வரவேற்றார். மாநில பொருளாளர் ஜீவானந்தம், செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார். அறிவியல் பிரசார இணை ஒருங்கிணைப்பாளர் பிரபு வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் வேலாயுதராஜா நன்றி கூறினார்.